மனித வாழ்க்கையில் திருமணம் நடந்தபிறகு, வம்சம் விருத்தியாக வேண்டுமென்பதற்காக கணவன்- மனைவி உறவை கடவுள் அளித்திருக்கிறார். ஆனால், சிலருக்கு கிரகக் கோளாறுகள் காரணமாக சந்தோஷம் கிடைக்காமல் போகிறது.
இல்லற சுகம் முழுமையாகக் கிட்டவும், வாரிசு உருவாகவும் உடல்நலம், மனநலம் அவசியம். அவற்றை வழங்குவதும் அவரவர் ஜாதக கிரக அமைப்புகளே.
ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி புதனாக இருந்து, அந்த புதன் சனியுடன் 6 அல்லது 7-ல் சேர்ந்திருந்தால், அந்த ஜாதகரின் பிறப்பு உறுப்பில் பிரச்சினை இருக்கும். அதனால் அவர் மன நோய்க்கு ஆளாவார்.
ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் புதன் இருந்து, சந்திரன் 6, 8-ல் இருந்தால் அவர் தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது வேறு விஷயங்களைச் சிந்திப்பார். அதனால் அவருக்கு முழுமையான நிறைவு கிட்டாது.
ஒருவரின் ரத்தத்திற்கு வலு அதிகமாக இருக்கவேண்டுமென்றால், அவரின் ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருக்கவேண்டும்.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரனுடன் சேர்ந்து துலா ராசியில் இருந்தால், அந்த மனிதருக்கு நோய் எதிர்ப்புசக்தி குறைவாக இருக்கும். அதனால் அவருடைய உயிரணுக்களில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு சீக்கிரமே உயிரணுக்கள் வெளியே வந்துவிடும். அதன் காரணமாக தாம்பத்திய விஷயத்தில் அவர் சந்தோஷமே இல்லாமல் இருப்பார்.
சுக்கிரன், செவ்வாய் ராகுவால் பார்க்கப்பட்டால் அல்லது சுக்கிரன், செவ்வாய் சேர்ந்திருந்து, அந்த ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக இருந்தால், பலருக்கு தூங்கிக்கொண்டிருக்கும்போதே உயிரணுக்கள் வெளியே வந்துவிடும். அதனால் சீதளம், வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும்.
6-ல் சுக்கிரன், புதன், செவ்வாய் அல்லது சுக்கிரன், சந்திரன், புதன் அல்லது சுக்கிரன், ராகு, சூரியன் சேர்ந்திருந்தால், அந்த ஜாதகர் அளவுக்குமீறிய காம உணர்வுடன் இருப்பார். தன் மனைவியை இம்சைப்படுத்துவார்.
ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன், சனி சேர்ந்து 5, 6, 12-ல் இருந்தால், அவருக்கு உயிரணுக்கள் குறைவாக இருக்கும். அல்லது பலம் குறைவாக இருக்கும். அதனால் குழந்தைப் பிறப்பில் பிரச்சினைகள் உண்டாகும்.
ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக இருந்து, அதிலிருந்து 4-ல் செவ்வாய், 8-ல் சனி இருந்தால் அவர் அதிகமாக சிந்திப்பார். மனைவியுடன் உறவுகொள்ளும்போதுகூட சிந்தனையிலேயே மூழ்கியிருப்பார். அதன் காரணமாக திருப்தி கிடைக்காது.
லக்னத்தில் சூரியன், செவ்வாய் அல்லது சூரியன், செவ்வாய், ராகு அல்லது சுக்கிரன்- கேது இருந்தால், அந்த ஜாதகத்தில் மனம் நிலையாக இருக்காது. பல பெண்களுடன் பழக வேண்டும் என்ற எண்ணத்துடனே இருப்பார். தன் மனைவியுடன் சந்தோஷமாகப் பேசமாட்டார். அதன் காரணமாக மகிழ்ச்சி இல்லாமல் இருப்பார்.
லக்னத்தில் சந்திரன், 6-ல் சுக்கிரன், புதன் அல்லது சுக்கிரன், செவ்வாய் இருந்தால், அவர் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் மோகிப்பார். தன் மனைவியை ஏமாற்றுவார். லக்னத்தில் சுக்கிரன், புதன், 4-ல் சனி, 12-ல் செவ்வாய், சூரியன் அல்லது செவ்வாய், ராகு இருந்தால், அவர் இளம் வயதிலேயே பல பெண்களுடன் உறவுகொண்டிருப்பார். அதனால், திருமணமான பிறகு மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ முடியாது.
பரிகாரங்கள்
உடலுறுப்பில் பிரச்சினை இருந்தால், பித்தம் அதிகமாகக் காரணமான புளி, எலுமிச்சம்பழம், வறுத்த பொருட்கள் ஆகியவற்றைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
தினமும் காலையில் எழுந்தவுடன் மூன்று டம்ளர் நீர் பருகவேண்டும். யோகாசனம் செய்யலாம்.
தெற்கில்தலைவைத்துப் படுப்பது நல்லது. படுக்கையறையில் கண்ணாடி இருக்கக்கூடாது.
மூன்று வேளை உணவுக்குப் பின்னும் சிறிது வெல்லம் சாப்பிட வேண்டும்.
சிவனுக்கு பால், நீர், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது நல்லது.
வைரம் அணியலாம். அல்லது ஒரு வெள்ளி மோதிரத்தை மோதிர விரலில் அணியவேண்டும். கையில் செப்புக் காப்பு அணிவது சிறந்தது.
தினமும் ஆஞ்சனேயரை நான்கு முறை சுற்றிவர வேண்டும்.
இரவில் படுக்கும்போது பாலில் பாதாம், பிஸ்தா, குங்குமப்பூ கலந்து பருக வேண்டும்.
இரவில் உணவுக்குப்பின் இரண்டு மணி நேரம் கழித்தே உறங்கச் செல்லவேண்டும்.
செல்: 98401 11534